மரண அறிவித்தல்

In loving memory of
kingsley Marinyasingam Thangarajah
Age 75May 31, 1940 – May 19, 2016
- Born in
- Colombo Mattakuliya
- Lived in
- Colombo Mattakuliya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு மட்டக்குளி காக்கைத்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிங்ஸ்லி மரியசிங்கம் தங்கராஜா அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தங்கராஜா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்ராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றீட்டா சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கமல்ராஜ், அனுஷியா(கனடா), விமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றவி பேர்னாட்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
அரோன் அவர்களின் ஆசைப் பேரனும்,
சிட்னி, ஸ்டான்லி(கனடா), திலகா(கனடா), லெஸ்லி, காலஞ்சென்ற டட்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெறாட்(கனடா), பேர்ணி, லலிதா(கனடா), ஜெசி, றூபி, காலஞ்சென்ற அன்ரன் கமலநேசன்(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜன்(பிரான்ஸ்), செல்வா(பிரான்ஸ்), வசந்தி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ட்ரினிட்டி(பிரான்ஸ்), ரேனுகா, றெஜியா, சிஸிலியா, நேசராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மருமக்களின் அன்புப் பெரிய மாமாவும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-05-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து பி.ப 10:00 மணிவரையும் 22-05-2016 ஞாயற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து பி.ப 03:00 மணிவரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

