மரண அறிவித்தல்

In loving memory of
Koneshwaran Kunatharshika
Age 36April 20, 1980 – July 3, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Pannakam, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பண்ணாகம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோணேஸ்வரன் குணதர்சிகா அவர்கள் 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், ஆனந்தவதனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசமூர்த்தி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷோனா, கவிஷனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராதிகா, நேசரூபன், கஜந்தி, குயிலகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதிவதனி, கேதீஸ்வரன், மதிவதனி, நடேஸ்வரன், சிவகரன், தர்மேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவதாசன், வதனரூபி, தனராஜன், உமா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
நிவேதா, பிரகாசன், பிரசான், சாருசன், கிசோனன் ஆகியோரின் அன்புப் பெரிய அத்தையும்,
நதிலன், ஜஸ்மிதா, ரிசான், அக்சயானி, ஜஸ்மின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

