நினைவஞ்சலி

In loving memory of
Kopalapillai Nageshwaran
Age 58February 4, 1960 – March 26, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை நாகேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மனைவி மனக்குமுறல்....!
என்னைக் கரம்பிடித்து இருபத்தோர் ஆண்டுகள்!
சொன்னது ஒருவார்த்தை சூடாக நானறியேன்!
அன்புக்கு இலக்கணமாய் அரவணைத்து வாழ்ந்தீர்கள்!
பண்பின் சிகரமாய் பணிவாக வாழ்ந்தீர்கள்!
எங்கே சென்றாலும் என்னிடம் சொல்வீர்களே!
எங்கே சென்றீர்கள் என்னிடம் சொல்லாமல்..?
இன்னொரு பிறப்புண்டேல் எனக்கு
இம்மண்ணில் மன்னவன்...!
உங்களையே மணவாளனாய் அடைவேன்!
உங்கள் பிரிவாலே உளம்நொந்து தவிக்கின்றேன்!
எங்கள் பிள்ளையோ என்னவோ ஆகிவிட்டான்!
உங்களைப் பிரிந்ததனால் உளநோய்க்கு ஆளானேன்!
தாங்கமுடியவில்லை தடுமாறித் தவிக்கின்றோம்
வாங்களப்பா மீண்டும் வையத்தில் எமக்காக....!
குழந்தை(இளம்பரிதி) குமுறல்
அப்பா என்மீது அன்பாக இருந்தீர்கள்!
தப்பாமல் எப்போதும் தட்டிக்கொடுத்தீர்கள்!
எப்போதும் எனக்கு எல்லாமே தருவீர்கள்!
இப்போ என்னைவிட்டு எங்கே தான் சென்றீர்கள்!
உங்களை எண்ணி ஒவ்வொரு நாளும்....
உளம்நொந்து துடிக்கின்றேன் அப்பா!
என்னைக் காண எப்போது வருவீர்கள்...- என
எண்ணியே ஏங்கித் தவிக்கின்றேன் அப்பா...!
அன்னார், கண்டாவளைப் பிரதேச செயலாளரும், கிளிநொச்சி உதவும் உறவுகள் அமைப்பு உப தலைவரும், கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம காப்பாளரும், யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், முன்னாள் கரைச்சிப் பிரதேச செயலாளரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு நிர்வாக உத்தியோகத்தரும், முன்னாள் தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபரும், கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயில் தற்காலிக கூட்டத் தலைவரும், கிளிநொச்சி சத்யசாயி மண்டலி முன்னாள் உப தலைவரும், ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் உபதலைவரும், பணிப்பாளரும் ஆவார்.
எனதருமைக் கணவர் திடீர் சுகவீனமுற்ற வேளையில் விரைந்து செயற்பட்ட கண்டாவளைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும், தர்மபுரம் வைத்தியசாலை, கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்குக் மற்றும் மரணச் செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், ஏனைய சமூக வலைத்தளங்களூடாகவும் அஞ்சலி செலுத்தி எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கிளிநொச்சியில் அஞ்சலிக் கூட்டத்தை ஒழுங்கு செய்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கும், பிரதேச செயலாளர்களுக்கும், கண்டாவளை பிரதேசச் செயலக உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும், பரந்தன் பிரதேச சபை ஆளணியினர்களுக்கும், கண்டாவளை இராணுவத்தினர்களுக்கும், கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், முன்னாள் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் அவர்களுக்கும் மேலும் அஞ்சலி உரைகளை ஆற்றியவர்களுக்கும், அஞ்சலிக் கூட்டத்தின் போது சிற்றுண்டி, குளிர்பானங்கள் வழங்கிய நிறுவனங்களுக்கும், பதாதைகள், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், மலர் வளையங்கள், மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், நினைவு மலருக்கு ஆக்கங்களைத் தந்து உதவி புரிந்தவர்களுக்கும் சிரம் தாழ்த்தி எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனிதத்தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 25-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் இந்நிகழ்விலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன் அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணியளவில் திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைந்துள்ள திருநெல்வேலி பழங்கிணற்றடி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 79, 2ம் ஒழுங்கை,
பாற்பண்ணை வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

