1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnan Jeevatharan
Age 46August 2, 1973 – December 28, 2019
- Born in
- Madduvil south
- Lived in
- Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணன் ஜீவாதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே ஓராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உன் ஆசை முகம் எங்கள்நெஞ்சில் நிலைத்திருக்கும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
நீ எமதருகில் இருப்பது போல் வருமோ..!
நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிராத்தனை 17-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
ஓம் சாந்தி!சாந்தி! சாந்தி!
— சதீஸ்- சகோதரர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

