1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kulam Selvarathinam
Age 55December 20, 1952 – September 17, 2008
- Born in
- Neduntivu
- Lived in
- Mallavi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட குலம் செல்வரத்தினம் அவர்களி்ன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிறையில் கிடந்து சிதைந்தும்
சிரிக்கும் என் தோளர்காள்
எங்களுக்காய் உங்களை எரிக்கின்றீர்கள்
எம்மினிய தோளர்களே.
எங்களது சரித்திரத்தின் நாளைய
எசமானர் நீங்கள்...
கோயிலை உடைத்து எங்கள்
கொள்கையை மாற்ற எண்ணும்
கோளைகள் வாழும் நாட்டில்
வீரர்கள் நீங்கள் அன்றோ
வீணர்கள் எங்கள்நாட்டு
வீதியை எரிக்கின்றார்கள்
வானரம்போல எங்கும் வன்முறை
செய்கின்றார்கள்
புத்தனைக்காட்டி அவன் புதினத்தைச்சாட்டி
நாட்டின் சத்தியம் தின்றவர்கள்
நாளை சாகவே வேண்டும் நாட்டில்
கன்னியர் கற்பைத்தின்ற
காடையர் எங்கள் நாட்டுக்
காவலர் என்பதாலே
சத்தியம் தோற்று அங்கு
சகலமும் பொய்க்கும் வேளை
நித்தமும் இந்த வேலை நிலைப்பதைத்
துடைக்க எண்ணி; சத்தியம்
காக்க நீங்கள்
சரித்திரம் படைத்த வீரர்
எத்தனை பேர்கள் வந்து
எதிர்த்திட்ட போதும் நாட்டின்
எல்லைகள் காக்கும் வீரர்....
எங்கள் எல்லைகள் காக்கும் வீரர்.
சிங்க தோள் படைத்து
சீறுகின்ற குரல் படைத்து
கங்கை தொடங்கி கடாரம் வரைக்கும்
இங்கெல்லாம் எம்மரசை ஏற்றி
மாற்றான் போற்ற மலர வைத்த
மரவினிலே வந்தவர் நாம்
இன்று ஏற்ற மற்று
எல்லாமற்று நாடற்று
வீடற்று நலிந்து வீதியிலே-
நிற்கின்ற விபீசனர்கள் நாம்....
தந்திரத்தரகர் செய்த
தரித்திர வேலையாலே
எங்கள் நாடு இன்று
எரிகின்றதென்ன செய்வேன்
செய்வதற்கேதுமில்லை என்று
செயலிலா நிற்க மாட்டேன்
எய்வதற்கு அம்புமுண்டு
எம்மிடத்தில் மறவருமுண்டு
வேதனைக் கண்ணீரால் சுதந்திர வேள்வியை
வளர்த்து நாட்டில் சாதனை செய்து
எங்கள் சரித்திரம் மாற்ற வேண்டும்
போதனை வேண்டாம் எங்கும் பொறுத்தது போதும் வாடா
பொறுக்கிகள் எங்கும் சாக
பொங்கிடு உரிமையோடு
எடுத்திடு சபதமின்று
எங்கள் நாட்டில் சாவதென்று
தடுப்பவர் தலைகள் சாய
தமிழர் பெயர் உலகில் வாழ
தம்பியர் தனையர் தந்தை
எங்கள் தாயினைக்காக்க -வாரீர்.
அடிமையின் விலங்கொடிக்க
அனைவரும் ஒன்று சேரீர்
சிங்கத்தின் வலிமையோடு
சிறுத்தையாய் பாய்வோம் வாடா
பொங்கிடும் உரிமைத்தீயில்
பொசுக்கிட சிங்களத்தை
சிங்கத்தின் வலிமையோடு சிறுத்தையாய்
பாய்வோம் வாடா....
கண்டவர் நடுங்க எங்கள்க
ளுகுகள் பறந்து வாரீர்
பொங்கிடும் உரிமைத்தீயில் பொசுக்கிட சிங்களத்தை.
சிரிப்பதனால் எங்கள் நாட்டுச் சிந்தனைகள்
வளர்வதில்லை-
எழுதாத விதியென்று
அழுவது அல்ல
எங்கள் விதி
இனியொரு விதி செய்வோம்.....
ஆக்கம்
குலம் செல்வரத்தினம் 1983.
— க. சுந்தரலிங்கம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

