25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kumarasaamy Sankarapillai
December 8, 1985
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரி ஆசிரியர் வீதி பெரிய அரசடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சங்கரப்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்முறுவல் பூத்த முகம் பூரிப்பு கொண்ட உள்ளம்
அன்புடனே யாவரையும் ஆதரிக்கும் அன்பு மனம்
இல்லத்தின் இருப்பிடத்தில் அல்லாமல் எங்கும் இருள் நீக்கும்
ஒளி விளக்காய் திகழ்ந்தீர்! நல்லவராய் வல்லவராய்
நாடு போற்ற வாழ்ந்தீர்! எல்லோருக்கும் மதியானீர்!
ஏற்றமுடன் புகழ் பூத்தீர்! செல்வம் ஈந்தீர் சிறப்பித்தீர்!
செயலாற்றல் ஈந்தீர்! ஆசையுடன் ஐயா என்று அழைத்திட
அருகில் இல்லையே நீங்கள் இன்று!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டது ஏனோ
ஆற முடியவில்லை இங்கு உங்கள் பிரிவை எண்ணி
ஆண்டு இருபத்தைந்து ஓடி மறைந்ததே இன்று - ஆனாலும்
ஆறவில்லை நாம் உங்கள் நினைவால் இன்னும் - ஆனாலும்
அமைதி கொள்கின்றோம் ஆண்டவனடியில் நீங்கள் என்று!
எம் அருமை ஐயாவே! இருபத்தைந்து ஆண்டென்ன
ஆயிரம் ஆண்டுகள்தான் உருண்டாலும் உங்களது
நினைவுகள் எங்களை விட்டு என்றும் அகலாது!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!........
அன்னாரின் இருபத்தைந்தாவது நினைவு தினத்தை நினைவு கூரும் பொருட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறார்களின் இல்லத்தில் 02 - 12 - 2010 வியாழக்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடுகின்றார்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

