Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasamy Akilanathan

In loving memory of

Kumarasamy Akilanathan

Age 67December 31, 1953 – March 18, 2021

Born in
Valvettithurai
Lived in
India, Hanover

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Hanover ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி அகிலநாதன் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(மன்னம்பிட்டி விதானையார்) பவளக்கொடிமாலை தம்பதிகளின் அன்பு மகனும், செல்வவிநாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனேஸ்வரி(மோகனம்), யோகேஸ்வரி(யோகம்) ஆகியோரின் அன்புக் கணவரும்,

இளஞ்செழியன்(சந்துரு), கயல்விழி, மலர்விழி, இதயச்சந்திரன்(சம்பத்), தமிழ்ச்செல்வி(மீரா), கீர்த்தனா, அஜித்சந்திரன்(அஜித்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தீஸ்(ராஜா), பாலச்சந்திரன்(சிறீ), T. ரொஸ்யந்த் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாலஷ்மி(கிளி ரீச்சர்), ஆனந்தலஷ்மி(குட்டியா), விஜயலஷ்மி(அம்பிகா), சுப்புலஷ்மி(சுசி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜேஷ்வரி, இரத்தினேஸ்வரி, வரதராஜன், குகராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நிதின், நிமல், நிதிலா, அற்புதன், அபூர்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் ந.ப 12:30 மணிவரை Lahe இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.