Aruthal

நன்றி நவிலல்

Photo of Kumarasamy Pararasasingam

In loving memory of

Kumarasamy Pararasasingam

Age 91November 5, 1929 – December 31, 2020

Born in
Neduntivu
Lived in
Uduvil, Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

நல்லதையே நினைத்து, நல்லதையே புரிந்து, எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்னும் நல்மனத்துடன் என்றும் வாழ்ந்த எங்கள் ஆருயிர்த் தந்தை! எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகி, நிறைவான தன் வாழ்வை எல்லோருக்கும் வாழ்ந்து காட்டி, எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய்த் திகழ்ந்து அமரத்துவமடைந்தார். இத்துயரச் செய்தியைக்கேட்டு நேரில் வந்தும்,
தொலைத்தொடர்புகள் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், குறிப்பாக, இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக வருகைதந்து எமக்கு உதவிகள் நல்கிய ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்: திரு.லோகன் கணபதி அவர்களுக்கும், தற்போதைய நெருக்கெடியானதும் கடினமான சூழ்நிலையில், பார்வை நேரக் கட்டுப்பாட்டுக்கிணங்கி கடும்குளிரில், காத்திருந்து கண்ணீர் அஞ்சலிகள், மலர் அஞ்சலிகள் செலுத்தி ஆத்ம சாந்திக்காகப்பிரார்த்தனை செய்த அனைவருக்கும், இறுதி நிகழ்வில் கனடா மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைத்தொடர்புகள் மூலமும் லங்கா - சிறி நேரடிக் காணொளிமூலமும் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்து, இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கும், லங்கா - சிறியில் துயரினைப் பகிர்ந்து கொண்டு ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், இத்துயரச் செய்தியை அனைத்துலகரீதியாகக் கொண்டு சேர்த்த லங்கா - சிறி, யாழ் - உதயன் பத்திரிகை, கனடா - தாய்வீடு பத்திரிகை, கனேடியத் தமிழ் வானொலி (சி.ரி.ஆர்.), கனேடியப் பல்கலாசாரவானொலி (சி.எம்.ஆர்.), முத்தமிழ் வானொலி, அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்- தமிழ்(ஐ.பி.சி. - தமிழ்) கிழக்குப் பண்பலை வானொலி (ஈஸ்ட்.எப்.எம்.), நெடுந்தீவு - கனடா ஒன்றியம், நெடுந்தீவு - ஐக்கிய இராச்சிய ஒன்றியம், குளோபல்உடுவிலார் ஒன்றியம், கனடா - உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம், கனடா - யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் முகநூல், சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பலவகையில் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகளை எங்கள் ஆருயிர்த் தந்தையின் ஆசிகளுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“மிக்க நன்றிகள்...!!!”

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · January 1, 2021மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.