10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Latha Senthurvasan
Age 37August 8, 1973 – January 10, 2011
- Born in
- Jaffna
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லதா செந்தூர்வாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் என்னும் கோயிலிலே
மனை சிறக்க வாழ்ந்த - எம்
அன்னையே
10 ஆண்டு காலம்
உருண்டோடிப்போனாலும்
உங்கள் அழியாத நினைவுகள்
நீங்காது எம் தாயே
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
வேதனைகள் வேர்வரை சென்றாலும்
விழுதுகளாய் எம்மைத் தாங்கினாய்
உன் குரல் கேளாமல் பரிதவிக்கும்
எம் குமுறல்கள்- உன்
காதுகளில் கேட்கிறதா
உயரங்கள் நாம் காண எம்
வாழ்க்கைப் பயணத்தில்
துணையாய் நீ நின்றாய்
பணம் தேடி அலையும்
பாசமில்லா உலகினில்- உன்
போல் பாசத்தை மிஞ்சிட
யார் உள்ளனர் இப் பூமிதனில்
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன
காலங்கள் கரைந்தாலும்
ஆயிரம் உறவுகள் எம் அருகில்
இருந்தாலும் எம் கண்களில் ஒளிரும்
உன் அன்பின் வெளிச்சம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

