மரண அறிவித்தல்

In loving memory of
Malarveniamma Kathiresu
Age 76March 24, 1940 – November 29, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மலர்வேணிஅம்மா கதிரேசு அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வேலுச்சாமி சௌபாக்கியவதி(தங்கக்குட்டி) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகமலர்(செல்வி- கனடா), குலோத்துங்கன்(கனடா), சிதம்பரதாஸ்(லண்டன்), மாலினி(உஷா- கனடா), சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மயில்வாகனசுந்தரம், தவமணிதேவி, சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற விமலாதேவி, நிர்மலாதேவி, அருள்மொழிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரனி(கிறிஸ்ரி), நந்தினி, அனுசியா, காலஞ்சென்ற ஜீனதா, சிவபாலன், இளமஞ்சரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஸ் - தீபா, சுதன், சுதர்சன், கோபி - மயூரி, நடராஜா, நரேஸ், ஜெகதீஸ், மதியழகன், சுலக்சன், பார்கவி, தமிழரசன், சமரசன், நிருபன், ரதீஸ், தினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பின் நாயகியே அம்மா
பண்புகளை சொல்லிச் சொல்லி
எம் அனைவரையும் வைத்திருந்தாயே
உம் அணைப்புக்குள் எப்பொழுதும்.
இன்று எமையெலாம் விட்டுச்சென்றாயே அம்மா
ஆறுதலடைய முடியவில்லை உன் பிரிவால்
புலம்புகின்றோம் நாம் உன்னை இழந்து
அம்மா உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர்பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
சிரித்த முகமதை இழந்த சோகத்தால்
கனத்த மனதுடன் கலங்கி நிற்கின்றோம்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் எம் குடும்பத்தில்
வந்து உதித்திடு தாயே .....!!!
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

