1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Manikam Thavarasa
Age 59January 20, 1957 – February 20, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி Campus Lane ஐப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Marl ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் தவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே உந்தனுக்கு
என்றும் மனம் வராது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
ஓர் ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதேஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்
தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்
பலபேரும் போற்றிட எமக்கு பல்கலையும் புகட்டி
பார்புகழ வைத்து வையத்துள் நாம் முந்தியிருக்க
அயராது தனையுருக்கிய தெய்வத்திற்கு- பாரில் நிகர்தான் யார்!
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனைக்கும் எம் தந்தைக்கு நிகராகுமா...
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம்
நீங்கள் பெருமை தேடி பிள்ளைகள் எம்மையும் நல்வழி காட்டியே
நானிலம் போற்றும் பண்பில் உருவாக்கிய தெய்வத்தின்
ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்ற
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அன்பு மனைவி:- அஞ்சி
பிள்ளைகள்:-கஜீதா, ஜீவிதா, றஜீதா கஜீபன், பிருந்தா
மருமக்கள்:- சசீஸ்கரன், உதயபவன், மயூரன்
பேரப்பிள்ளைகள்:- அகல்யா, ஆரியன், அனேக்கா, லியா, அயய், அசியா, அமீரா.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
— ரோசி சசீஸ்கரன்(மகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

