மரண அறிவித்தல்

In loving memory of
Mariyamma Mariyampillai
Age 81April 7, 1936 – February 19, 2018
- Born in
- Kangesanthurai
- Lived in
- Naranthanai, Kili Kandavalai, Kolumputhurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறை மாங்கொல்லை ஊராவிலைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை பெரியபுலம், கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். கொழும்புத்துறை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மரியம்மா மரியாம்பிள்ளை அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அவுறாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
டொறிஸ் ஜெனிற்றா(மாலா- ஜெர்மனி), மில்ரன் மகேந்திரன்(லண்டன்), ஜோன் நியூட்டன்(சுரேஷ்- பிரான்ஸ்), யூட் ரவீந்திரன்(பிரான்ஸ்), யூலியற் அஞ்சலா, யூலியன் செல்வேந்திரன்(பிரான்ஸ்), றீகன் கிஸ்காட்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அன்னம்மா மற்றும் நேசம்மா, காலஞ்சென்றவர்களான பிலோமினம்மா, ராசேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
போல்(ஜெர்மனி), ஜெயந்தி(லண்டன்), சிந்தியா(பிரான்ஸ்), ஜமுனா(ஜனா- பிரான்ஸ்), அருங்கலைச்செல்வன்(நிர்வாக உத்தியோகத்தர், பிரதிப்பிரதம செயலாளர்- பொறியியல் சேவை, வடமாகாணம்), அமலினி(பிரான்ஸ்), றுவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற பேனடேற், வின்சஸ்லோஸ், காலஞ்சென்றவர்களான சாள்ஸ், ஜோர்ச் மற்றும் லின்ரா, காலஞ்சென்ற சந்திரா, சரோ, மரியதாஸ்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), வைத்தியகலாநிதி ஸ்ரனிஸ்லோஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
ஹமில்ரன்(வினோத்- பொறியியலாளர்), அன்ரோனியா, திலீப், நிரோஷ், நிலக்ஷி, நிரோஜினி, ஜெனிபர், ஜொபினா, கெளசி, அனோஜினி, ஜெசிக்கா, அனோசிகன், அனோசிகா, அனோஜன், அன்றியன், வருணி, அபிஷா, (F)பிளோரா, நெல்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

