Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mariyampillai Thavarajah

In loving memory of

Mariyampillai Thavarajah

Age 63July 10, 1955 – August 10, 2018

Born in
Mullaitivu
Lived in
Mullai Alampil, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு அளம்பில், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தவராஜா அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, மேரிமாகிறேற் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செபஸ்ரியாம்பிள்ளை மதலேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிஆரோக்கியம்(ராசக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

மரிய துஷாந்தி, M.T. நிஷாந், பேணாட் நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி, யோய், பொன்ராஜா, பாலராஜா, சந்திரா, அரியகுமார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, பேலி, தியாகராஜா, பாக்கியராஜா, நவரெட்ணராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகிரதன், நெல்சி மெரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இருதயநாதர், ஆரோக்கியநாதர், அமிர்தநாதர், இருதயமேரி(செல்லக்கிளி), ஆரோக்கியமேரி, தேவறம்பை சகாயராணி, றோசு, ராணி அருள்மேரி, காலஞ்சென்றவர்களான சச்சுமனேஜர், பொன்ராசா, இலங்கைநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டனிலோர், பதுஸ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் வவுனியா கோவில்குளம் 10ம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் முல்லைத்தீவு அளம்பிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கண்ணீர் அஞ்சலிக்காக எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் அளம்பில் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.