Aruthal

நினைவஞ்சலி

பிறப்புJuly 16, 1951
இறப்புMay 11, 2022
Photo of Mariyampillai Thevaratnam

Mariyampillai Thevaratnam

Age 70, Regina Transport (M.T.R), Regina Hardware, Regina Building - Proprietor

Born in
Kudathanai
Lived in
Kudathanai, Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
(மத். 5:8)

அப்பா !
நீங்கள் இறைவன் எமக்கு தந்த ஒரு கொடை
உங்கள்ஆழமான விசுவாசம், கடின உழைப்பு
யாரையும் புண்படுத்தாத நல்ல மனம்
உதவி செய்யும் தாராள உள்ளம்
வளமையிலும் எளிமையான வாழ்வுஎ
ல்லோரையும் மதிக்கும் உயர் பண்பு
மன்னித்து மறக்கும் மனம்
கனிவான பேச்சு
தூய்மையான உள்ளம்
இவைகள் உங்கள் வாழ்வின்
உயரிய மனிதப் பண்புகள்
இவ் உயரிய பண்புகளில் நாமும் வழிநடக்க
வழி நடத்துங்கள் விண்ணிலிருந்து.

எமது பாசமிகு குடும்பத் தலைவனை இழந்து நாம் துயருற்ற வேளை நேரில் வந்து உடனிருந்த உறவுகள், நண்பர்கள், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல் வழியாக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்த உறவுகள், நண்பர்கள், இன்னும் துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், மலர் வளையம், மலர் மாலை ஆகியவை ஊடாக தங்கள் அனுதாபங்களை தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்கள், எமது அப்பாவின் இறுதி யாத்திரைச் சடங்கில் கலந்து அவருக்கு மரியாதை செலுத்தி அவருக்காக செபித்த அனைத்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர், உறவுகள், நண்பர்கள் மேலும் இன்றுவரை எம்முடனிருந்து எமக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்யும் அன்பு உள்ளங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகின்றோம்.

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருப்பலியில் பங்கு கொண்டு அதனைத்தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் மதிய விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · May 12, 2022மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.