1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mariyathasan Savarimuthu
Age 58December 28, 1950 – June 5, 2009
- Born in
- Kayts
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட மரியதாசன் சவரிமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பானவனே,
துன்ப வேளைகளில் துணையானவனே
பண்பானவனே
பார்வையால் அனைவரையும் உறவாக்கியவனே
உண்மையானவனே
உலகெல்லாம் உறவுகளை விதைத்தவனே
சிரித்த முகத்தவனே
சீரான நற்கருத்தை விதைத்தவனே
எப்படி உன்னால்,
ஒரு அன்புலகை கட்ட முடிந்தது?
எப்படி உன்னால்,
அன்பு வாழ்வு வாழ முடிந்தது?
எப்படி உன்னால்,
அனைவரையும் அரவணைக்க முடிந்தது?
எப்படி உன்னால்
நீ படைத்த அன்புலகை விட்டுப் பிரிய முடிந்தது.
வாழ்ந்தவனே வாழக்காட்டியவனே
சிறுசுகளையும், பெரிசுகளையும் உன்பால் இழுத்து ஈர்த்த
உன் நினைவுகள் அகல மறுக்கின்றன
மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், வந்து மீள்கின்றன.
உன் பெயர் நாங்கள் கூடுகின்ற இடங்களில்
உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றது.
உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனை இறைஞ்சி நிற்கும் மனைவி, பிள்ளைகள்.
— விமலா, சோபிகா, சோபன், மார்ஷல்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

