நினைவஞ்சலி

In loving memory of
Markandu Puranapaakiyam
August 9, 2009
- Born in
- Chulipuram
- Lived in
- Chulipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மார்கண்டு பூரணபாக்கியம் அவர்களின் 60ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
பத்துமாதங்கள் சுமந்து பெற்றெடுத்து
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கற்பிக்க
ஆண்டவனால் அனுப்பப்பட்ட
அபூர்வ பிறவி எங்கள் அம்மா!
இல்லையென்று வருவோர்க்கு
இன்முகம் காட்டி
பொறுமையின் சிகரமாகவும்
பண்பின் பிறப்பிடமாகவும்
வாழ்ந்து மறைந்த எங்கள் அன்புத்தாய்!
நல்ல பண்பான மகளாய், சகோதரியாய்
மருமகளாய், மனைவியாய், தாயாய்
மாமியாய், பேத்தியாய், பூட்டியாய்
உற்றார், உறவினர்களுக்கு ஒரு சேவகியாய்
நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை
எம் மனதை விட்டு அகலாது அம்மா!
எமது அன்புத்தாயாரின் பிரிவினால் நாம் கலங்கி நின்றபோது எமக்கு நேரில்வந்து துயர் தீர்த்தவர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், எங்கள் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், இன்னும் வேறு வழிகளில் உதவிசெய்த யாவர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது தாயாரின் நினைவாக 04.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸ் லாச்சப்பல் அம்மன் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில் நடைபெறவிருக்கும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு எல்லோரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் & பூட்டப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

