Aruthal

மரண அறிவித்தல்

அன்னை மடியில்July 2, 1948
இறைவன் அடியில்December 29, 2018
Photo of Marku Mariampillai

Marku Mariampillai

Age 70

Born in: Point PedroLived in: Struer

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பருத்தித்துறை புனித அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Struer ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கு மரியாம்பிள்ளை அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாணிமார்க்கு, மார்க்கு நீக்கிளாஸ்அம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், அந்தோனிப்பிள்ளை பவளம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மரியாம்பிள்ளை அருந்தவம் அவர்களின் அன்புக் கணவரும்,

கொண்சியூஸ் தனதாஸ், ஜனார்த்தினி, ஞானசீலன், அன்ரனி வசந்தராஜா, வசந்த மனோகரன், ஜெயபாரதிராஜன், அமல உற்பவநாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிமான்பிள்ளை, அல்பிறட், பரிமளம் மற்றும் மனுவல், பிலோமினா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஜான்சி, சசிதரன், ரஜனி, ஜொய்சி, சிந்துஜா, லோஜினி, பானுஷா, நபீல், ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றோமியோ, றெமோ, றிகானா, பிரன்சன், நிகிதா, பிரன்சனா, அதிஷ்டன், அபூர்வன், ஜெய்சன், ஸ்ரிவன், ஸ்ரெபியா, ஸ்ரெலன், வானுஜா, அலெக்சியா, ஏஞ்சலீனா, அலெக்ஸ், அஸ்ரினா, அடிக்சன், அடிக்ஸியா, கீர்த்திகன், அக்செஜென், நிக்களஸ், ஏஞ்சலா, டெவ்றின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெனல் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவரது செல்லப்பிராணி செரி ஆகும்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் Kirkegade 42B, 7600 Struer, Danmark, இல் அமைந்துள்ள Struer Kirke இல் 05-01-2019 அன்று சனிக்கிழமை நண்பகல் 12:30 மணி தொடங்கி 13: 30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 13:30 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றிக்கான நல்லடக்கத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அருகாமையில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து Bredgade 57, 7600 Struer, Denmark இல் அமைந்துள்ள Olympia மண்டபத்தில் நடைபெறும் சிறு உபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.