1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
------
Age 33November 21, 1975 – March 26, 2009
- Born in
- Maviddapuram
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து 26.03.2009 அன்று புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சில் அகாலமரணமடைந்த சிவகரன் சியாமளா, சி. சுவர்ணன், சி. துளசி, சி. புவிதாயினி அவர்களின் ஓராண்டு நினைவலைகள்.
ஆண்டு ஒன்று ஆனாலும் ஆறுமா மனம்?
ஆறாது
துயர் ஓடுதே ஆறாக
உடன்பிறவா சகோதரியே
உன்னோடு குழந்தைகளும்
எம்மை விட்டுப் போனதெண்ணி
வேதனையாய் துடிக்கும் மனம் ஆறாதம்மா
மாமா என்றழைத்து
மடிமீது வந்தமர்ந்து விளையாடி
சிந்திய மழலைகளின் மலர்சிரிப்பு
நினைவில் வந்து கொல்லுதம்மா
பாசமழை பொழிந்து
அன்னை போல் உபசரித்த
அன்புச் சகோதரியே
முத்தென மூன்று மருமக்களைத் தந்தாய்
கொஞ்சும் அழகுப் பிஞ்சுகளினை
அள்ளி அணைத்துக் களையாற
நான் ஓடி வருவேன்
துள்ளி அவை வந்தென்னை
கட்டியணைத்துத் தரும் முத்தத்தின்
இதத்தில் நான் மிதப்பேன்
இந்த சுகம் இனி எனக்கேது?
கொடிய போர் அரக்கன்
பொழிந்த குண்டு மழையில்
பொசுங்கியதம்மா உன்குடும்பம்
அன்று....
வானிலிருந்து வரும் குண்டு
அயலில் வீழ்ந்தாலும்
அலறி வீழ்ந்தோடி வருவேனே
உந்தன் அன்புச் செல்வங்களைக்
காணும்வரை எந்தன் நெஞ்சு
பதைபதைத்துப் போகுமம்மா..!
அங்கு....
அன்னை காப்புத்தான் பெரும் காப்பென
உன்னை அணைத்தபடி நிற்கும் குழந்தைகளைக்
கண்டு மனம் பதைக்கும்
காப்பு நிலையெடுத்து
அரணுள் அமர் என்று
உன்னை நான் கண்டிப்பேன்
நீயோ....
"மடிந்தால் நால்வரும்" என்றே
கூறிச் சிரிப்பாயம்மா...!
இன்று....
உண்மை அதுவாகிப் போனதம்மா..!
அருகில் நான் இல்லையே
உங்கள் மண்ணில் மலர்தூவும்
வாய்ப்பும் எனக்கில்லையே..!
கண்ணான குழந்தைகளை - இனி
காண எனக்கு வழியில்லையே..!
துடிக்கும் என்நெஞ்சில்
இனி எனக்கு ஆறுதலேதம்மா..?
அன்புச் சகோதரியே..!
சோகத்தை சொல்லி அழ - நல்ல
துணையும் எனக்கு இங்கில்லையம்மா.
சகோதரியே...!
விதி சொன்ன சேதி என்ன
முத்தாக மூன்று செல்வம் நீபெற்று
உந்தன் பெயர் சொல்ல ஒன்றுகூட
மிஞ்சவில்லையே
ஏனம்மா கொத்தாக எடுத்துச் சென்றாய்
கைபிடித்த கணவன் வர
காலம் செல்லும் என்று - அதுவரை
தவிக்கவிட மனம் இன்றித்தான்
எடுத்துச் சென்றாயோ...?
உன்கையால் அன்னமிட்ட
உடன்பிறவாச் சகோதரர் எத்தனைபேர்..?
ஒருத்தர் கூட உதவ அங்கு
இல்லாது செய்த விதியை என்ன சொல்ல?
கொடிய விதி கொன்றொழித்த
மருமக்கள் மீண்டெழுந்து வருவாரோ?
நெஞ்சு வெடிக்குதம்மா!
இனியும் ஒரு வாழ்வெதற்கு...?
உம்மை நினைத்து அழுவதற்கா...?
கைபிடித்த கணவன்
பணி கருதி அலைந்தாலும்
தனிமரமாய் உறுதியுடன்
தளராது இருந்தவள் நீ
துணைவனது பணியாய் கொண்டு
எமக்கு உதவிகள் பல செய்தவள் நீ
நாம் அழிந்து போகும்வரை
நினைவுகொள்ளும் உள்ளம்
அழிந்து போகாதம்மா
ஆறுதில்லை என் மனம்
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறாதம்மா என் மனம்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற தமிழின அழிப்பில் உயிர்நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் எம் நெஞ்சம் கனத்த நினைவஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
— என்றென்றும் உங்கள் நினைவுகளுடன், அண்ணா ஆனந்த் , மாமா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

