Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of ------

In loving memory of

------

Age 87June 9, 1922 – July 19, 2009

Born in
Vannarpannai
Lived in
Vannarpannai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவில் மணிக்கூட்டு வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயஞ்செட்டியார் சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், சுபத்திரா மகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியும்,

உள்ளத்தால் உயர்வாகி,
எமது வாழ்விற்கு வழிகாட்டிய
எமது குடும்பத்தின் குலவிளக்குகளே!

நீங்கள் எமது இதயங்களை
ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டு
ஓராண்டும், ஈராண்டும் ஆனதுவோ,
கடவுளே நம்பமுடியவில்லை,

எமது அப்பாவும், அக்காவும்,
எம்முடனே இல்லையென,
நம்ப மறுக்கின்றனவே
எம் இதயங்கள்,

எம் நெஞ்சைவிட்டு அகலா தெய்வங்களே,
உங்களை நாம் மறந்தால்தானே நினைப்பதற்கு,
உங்கள் உருவங்கள் மறைந்தது உண்மையே,
ஆனாலும் உங்கள் பிரிவுத்துயர்
எமக்கு என்றென்றும் ஆறாத துன்பமும்,
நெஞ்சை விட்டு அகலா உண்மையுமே,
நித்தமும், எத்தனை ஆறுதல் வார்த்தைகள் கூறிடினும் ஆறிடுமோ

அம்மாவின் துன்பம் பேரப்பிள்ளைகளும்,
பெறாமக்களும், மருமக்களும்,
நித்தம் தேடுகின்றனரே அன்பு தாத்தாவையும்,
பெரியம்மாவையும், மாமியையும்,
பிஞ்சு உள்ளங்களுக்கு எத்தனை ஆறுதல்கள் கூறினாலும்
அத்தனை உள்ளங்களும் அழுகின்றனவே,

நீங்காத நினைவாய் நிகரற்ற நிழலாகி
எம்மை எல்லாம் ஆழாத்துயரில் ஆழ்த்தி விட்டு
இருவரும் விண்ணுலகம் சென்று விட்டார்களே,
எம்மையெல்லாம் அரவணைத்து காத்த
உங்கள் முகங்களை காணாது தவிக்கின்றோமே,

பாசத்தின் உறைவிடங்களே
மீளாத சோகத்தினை எமக்கெல்லாம் தந்து
மறைந்து போன எம் தெய்வங்களே,
தினம், தினம் எண்ணிக் கலங்குகின்றோமே கண்ணீர் பெருக!

ஒன்று, இரண்டு அல்ல
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
எம் இறுதி மூச்சு நிற்கும் வரைக்கும்
நாம்மறவோம் எம் அன்பு தெய்வங்களே,
எம் அன்பு தெய்வங்களின் ஆத்ம சாந்திக்காய்
தினமும் கண்ணீருடன் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் பிரிவுத்துயரில் கலங்கும் உள்ளங்கள் மனைவி, சி. ஆதிலெட்சுமி(அம்மா), வீ.மகேஸ்வரன்(கணவன்), பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள், மைத்துனர்கள், மைத்துனியர் மற்றும் உறவினர்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.