நினைவஞ்சலி

In loving memory of
------
Age 59August 6, 1936 – February 10, 1996
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Kondavil, Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு குணேஸ்வரி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் கதிர்காமு அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழும் போது துன்பம் தெரியாமல்
வளர்த்து இன்பத்தைத் தந்தவர்கள்
நாளும் பொழுதும் என்பும் உருகிடும்
அன்பினைச் சொரிந்து அணைத்து மகிழ்ந்தவர்கள்
வாழும் வயதினில் தமக்கென வாழாமல்
வீழும் வரைக்கும் எமக்காக வாழ்ந்தவர்கள்
சூழும் வினைப்பயன் ஒன்று கூடி பாழும்
விதியாய் வந்திடப் பாதியிலே போனதென்ன?
தோள் மேலே தொட்டில் கட்டி- எங்களை
கால் நோகாமல் நடை பழக்கிய தந்தை எங்கே?
மார் மேலே தொட்டில் கட்டி- எங்களை
மனம் நோகாமல் நடை பழக்கிய அன்னை எங்கே?
தாயற்றுப் போனால் சீரற்றுப் போய் விடுமாம்
தந்தையற்றுப் போனால் கல்வியற்றுப் போய் விடுமாம்
அந்நிலைக்கு நாங்கள் ஆளாகாமல் காத்துவளர்த்த
புண்ணியர்களை இரு கரம் கூப்பி வணங்குகி்ன்றோம்
முன்னறி தெய்வம் என்று சும்மாவா சொன்னாள் அவ்வை
முன்னேறி நாம் வாழ முதுகெலும்பாய் நின்ற மாதா பிதாவை!
தன்னுயிர் போலே மன்னுயிரையும் தான் நினைத்து
வாழ்ந்த எங்கள் இன்னுயிர்த் தெய்வங்களின் இருபதாம்
ஆண்டு நினைவலைகள் கண்முன்னே மோதிடவே
கண்ணீர் அலையில் கரைகின்றோம் நாமிங்கே!
கண்ணிமை போல் காத்து வளர்த்து நிழல் தந்தவரே!
தண்ணியநிழற் குளத்திருந்தும் வாடுகின்ற
பிள்ளைக் குவளைகளாய் நாமிங்கே!
உங்களின் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— சண்முகராஜா(சண்ரவி- மகன், சுவிஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

