நினைவஞ்சலி

In loving memory of
------
Age 63June 18, 1912 – May 10, 1976
- Born in
- Pungudutivu
- Lived in
- Pungudutivu, Colombo, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகந்தையா ஆறுமுகம்
யாழ். புங்குடுதீவு குறுவெட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஆறுமுகம் அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
செல்வானந்தம் செல்வநாயகி
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் செல்வநாயகி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறுமுகம் தலயசிங்கம்
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் தலயசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ ? - எம்
கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்!
ஆளாகு முன்னரே அன்பான உங்களை இழந்தோம்!
நாம் ஆளாகும்வரை எம்மோடு வாழ்ந்த நீங்கள் எம்மை
மீளாத் துயரில் ஆழ்த்தி ஆண்டுகள் பல ஆனது
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும் - இவ்வுலகில்
போற்றி வாழ்கின்ற காலம்வரை... எம்
கடைசி மூச்சும் பேச்சும் இவ் உலகில்
வீற்றிருக்கும் இறுதி காலம்வரை...
உங்கள் நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

