Aruthal

மரண அறிவித்தல்

Photo of Moses Antonipillai

In loving memory of

Moses Antonipillai

Age 81September 4, 1937 – July 23, 2019

Born in
Anaikottai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow வை வதிவிடமாகவும் கொண்ட மோசஸ் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மோசஸ், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, மனோண்மணி, அழகரட்ணம், பூபாலசிங்கம் மற்றும் அருள்மணி ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,

மேரி அஞ்சலா இராஜதுரை(ஓய்வுநிலை பெரும்பாக உத்தியோகத்தர் கமநலசேவை நிலையம் - நல்லூர், லண்டன்), Dr. புஸ்பநாதன்(லண்டன்) ஆகியோரின் ஆசைச் சின்னையாவும்,

காலஞ்சென்றவர்களான B.A. பெர்னாண்டோ, S.P. சின்னத்துரை, G.S.பிள்ளை(ஓய்வுநிலை பொலிஸ் இன்ஸ்பெக்டர்) மற்றும் பூமலர், அமராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மசீலன்(பயஸ், ஓய்வுநிலை பொலிஸ் இன்ஸ்பெக்டர்), தங்கத்துரை, றீற்றா சரோஜினி(கனடா), காலஞ்சென்ற றீற்றா றஜனி மற்றும் ஜெயசீலன்(நோர்வே), விஜயசீலன்(ஜேர்மனி), அருட்தந்தை S.A. றொஷான்(முகாமையாளர் - யாழ் புனித வளன் கத்தோலிக்க அச்சகம்), தர்ஷிக்கா( ஐக்கிய அமெரிக்கா), நிஷாந்தன்(நியூசிலாந்து) ஆகியோரின் ஆசை அங்கிளும்,

காலஞ்சென்ற அழகேஸ்வரன் மற்றும் அழகேஸ்வரி, அழகேந்திரி, அழகுநாயகி, அழகுராணி, அழகேந்திரன், அழகு ரேவதி, லோயிற் சுரேஸ்குமார்(கனடா), புளோரின் சாந்தினி(ஐக்கிய அமெரிக்கா), இயேசுரன் ரமேஸ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-07-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை நீர்கொழும்பு வெஸ்ரன் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சொந்த இல்லமாகிய “செல்லம்ஸ்” உயரப்புலம் ஆனைக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஆனைக்கோட்டை புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.