3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mukunthan Devan
Age 20January 22, 1987 – August 17, 2007
- Born in
- Nelliyadi
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தேவன் முகுந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான முகுந்தாவே எனக்கு பின்
நீ பிறந்து எங்களை எல்லாம் விட்டு
செல்ல எப்படி உனக்கு மனம் வந்தது...
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
வாழ்க்கையை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
உன் நண்பனுக்காக உன்
உயிரைக் கொடுத்து - எம்மை
தவிக்க விட்டுவிட்டாய்...
பூவைப்போல் புன்னகை நிறைந்த - முகம்
கலகலப்பான பேச்சு கனிவான நல்லுள்ளம்!
அன்பை மட்டுமே அதிகமாய்ச் சுமந்த அதிசயம்
முகுந்தன் எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம் நீ!
நேற்றுவரை நீ எம்முடன் வாழ்ந்து
நிறைவு கண்டதெல்லாம் நேற்றோடு போயிற்று - உன்
நினைவொன்றே எங்கள் வாழ்வாச்சு
மூன்றாண்டு ஆனதய்யா!..
எங்கள் ஆனந்தம் தொலைந்ததைய்யா!..
மகனாய் தம்பியாய் நல்ல அண்ணனாய்
உயிர்க்கொடுக்கும் நண்பனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!
ஆண்டு மூன்றல்ல ஆயிரம் ஆனாலும்
மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவில், நித்திரையில், எம் உணர்வில்,
உள்ளத்தில் எப்போதும் - நீ
கனவில், கற்பனையில்
எம் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ
நீ இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாய் - போகுதய்யா..
நீ வாழ்ந்த வீடு நீ கடந்த இடம்
உன்னை நாம் நினைத்திருக்க
நீ மட்டும் எங்கு போனாய்
எமைவிட்டு - ஏன் பிரிந்தாய்?
அன்பாய், ஆசையாய், அழகின் ஓவியமாய்
இருபத்தி மூன்றாண்டு எம்மோடு நீ வாழ்ந்த
எழிலான வாழ்வை என்றுமே நினைத்தபடி
வாழ்கின்றோம் முகுந்தா.....
உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— என்றும் உன் நினைவுடன் அன்பு அன்ரி சித்தப்பா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

