மரண அறிவித்தல்

In loving memory of
Muthiah William Rajasingam
Age 77January 4, 1941 – September 26, 2018
- Born in
- Pandatharippu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா வில்லியம் ராஜசிங்கம் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
"நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை
முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”
2 தீமோத்தேயு 4:7
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி ஜோடன் முத்தையா, செல்வமணி மாகிரட் முத்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இஷபெலா குலமணி, அருந்தவம் ஆகியோரின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், அருணன், தீபன், ஜேய்மி, சுபாஷினி(அவுஸ்திரேலியா), பிரியன்(அவுஸ்திரேலியா), இன்பன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைராஜசிங்கம், கனகமலர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நவரட்ணம், தங்கமலர் மற்றும் பாக்கியமலர்(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), ஜீவமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டெவொன், டனிக்கா, நேத்தன், அஷர், தாஷியா, தனேஷ், ஷெஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று மதியம் முதல் The Respect Home Jayaratne மலர்ச்சாலை இல. 483, பெளத்தலோக மாவத்தை, கொழும்பு- 08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் பொறளை அங்கிலிக்கன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

