Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Naagalingam Shanmuganaathan

In loving memory of

Naagalingam Shanmuganaathan

Age 79February 14, 1930 – February 20, 2009

Born in
Manipay
Lived in
India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பெனும் விருட்சமாய் தன் இறுதிமூச்சுவரை
எம்மைத் தாங்கி நின்ற ஆலமரம்!
அம்மரத்தின் நிழலில் ஒவ்வொரு விழுதுகளாய்
தலைநிமிர்ந்து பெருமை கொண்டிருந்தோம்.
கணவன், அப்பா, மாமா, பேரன், தம்பி - என்று
உள்ள ஒவ்வோர் உறவின் நல்லதோர் உதாரணம்
பாசம் என்ற நூல்கொண்டு எம்மைப் பிணைத்து
அன்பிற்கோர் புது இலக்கணம் தந்தவர் நீங்கள்.

காந்தமாய் கவரும் சிரிப்பும், மயிலிறகாய் வருடும் பேச்சும்
பெற்றுத் தந்த நண்பர்களோ ஏராளம்
பகைகொண்டு வந்தவரும் தலைதாழ்ந்து - உங்களை
மனிதருள் மாணிக்கமாய் கண்டுணர்ந்து கொண்டனரே!
உறவுகளி்ன் இடர்கண்ட இடத்தில் - முன்னின்று
துயர்துடைத்த உத்தமர் நீங்கள்
பிறக்கும் போதே தவமின்றி வாங்கி வந்த வரமாய்
உங்களை எம் உறவாக கொண்டிருந்தோம்.

சென்ற இடமெல்லாம் உங்கள் பெயரை முன்னிறுத்தியே
எமக்கோர் முகவரியைப் பெற்றிருந்தோம்
இன்று..............
உங்கள் பிரிவால் தூக்கம் தொலைத்த எங்கள்
இரவுகளின் தனிமையில் உங்கள் நினைவுகளின் நெருடல்கள்
நீங்கள் எம்மைவிட்டு மறைந்தாலும் உங்கள்
விழுதுகள் நாம் என்றென்றும் காத்து நிற்போம்
நீங்கள் தந்த நிழலின் பெருமை சற்றும் குறையாமல்.....!

— உங்கள் பிரிவுத்துயரால் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அக்கா மற்றும் உறவினர்கள், நண்பர்கள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.