நினைவஞ்சலி

In loving memory of
Nadarajah Kamalaasini
Age 59September 22, 1951 – November 10, 2010
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா கமலாசினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அன்னையே எங்களின் ஆருயிர் தாயே!
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
மண்ணில் நல்மாதரசியாய் வந்து அவதரித்தாய்
கண்ணின் மணிபோல் எமைக்காத்து நின்றாயம்மா
எத்தனை கனவோடு வாழ்ந்திட்டீர் அம்மா
அம்மா நீ மறைந்திட்டு மாதமொன்று சென்றாலும்
எம் மனங்களை விட்டு உன்னுருவம் மறையாதம்மா..
எங்கள் குடும்பத்தலைவியின் பிரிவுத்துயர் கேட்டு எங்கள் இல்லங்களுக்கு நேரில் வருகைதந்தும், உலகின் பல பாகங்களிலிருந்தும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும், அன்னையின் பூதவூடல் பார்வைக்கு வைக்கபட்ட போது மண்டபத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகள், தகனக்கிரியைகளில் கலந்துக்கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டும், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தியும் அஞ்சலி தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

