மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Yogammah
Age 94March 3, 1924 – August 30, 2018
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Jaffna, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா யோகம்மா அவர்கள் 30-08-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம், சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(முன்னாள் இராணுவ சார்ஜன்ட்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரஞ்சோதி(பிரான்ஸ்), நவமணிதேவி(சிவானந்தம்- இலங்கை), காலஞ்சென்றவர்களான யோகநாதன்(றஞ்சி), ஜெகநாதன்(ஜெகன் மாஸ்டர்) மற்றும் நளாயினி(நளா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரிபூரணம் மற்றும் இராசம்மா(முன்னாள் ஆசிரியை), புவனேஸ்வரி(முன்னாள் ஆசிரியை), மகாலெட்சுமி(முன்னாள் ஆசிரியை), இரட்ணவேல்(முன்னாள் ஆசிரியர்), காலஞ்சென்ற மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசீலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற இராசையா(ஓய்வுபெற்ற அரச கட்டடத்திணைக்கள அதிகாரி) மற்றும் சியாமளா(பிரான்ஸ்), சுந்தரகுமார்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(இராணுவ உத்தியோகத்தர்), கந்தையா, சிவகுரு(முன்னாள் ஆசிரியர்), பசுபதிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்), மகாலிங்கசிவம்(முன்னாள் ஆசிரியர்), புஸ்பரட்ணம்(முன்னாள் ஆசிரியர்), கணகேஸ்வரி(முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனஞ்சேயன், தாரணி, தமயந்தி, மைதிலி, திலீபன், திருவேந்திரன், யாழினி, தாட்சாயினி, ஜெனன், சுவீத்தா, சிருஷா, சோபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் இல.483, பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு- 08 ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

