4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Poobalasingam
Age 78April 29, 1938 – April 10, 2017
- Born in
- Pungudutive 8th Ward
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Montreux Villeneuve வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
தப்பு செய்தால் தண்டித்து
தவறு செய்தால் மன்னித்து
தந்தைக்கெல்லாம் முன்னுதாரணமாய்
தரணியில் இருந்தவர் நீங்களே!
அம்மாவுக்கு ஒரு நல்மகனாய்
உடன் பிறப்புகளுக்கு நல்லதோர் வழிகாட்டியாய்
மனைவிக்கு சிறந்த கணவனாய்
பிள்ளைகளுக்கு நல்லதொரு ஐயாவாய்
திகழ்ந்தவர் நீங்களே!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே ஐயா!
என்று காண்போமோ ஐயா!!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஐயா
அழியாது உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள்
அதை நெஞ்சில் எண்ணியே வாழ்ந்திடுவோம் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

