மரண அறிவித்தல்

Nagalingam Sivapathan
Age 91, Famous Trader- Demetagoda
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவபாதன் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
வரதன், தயாளன், ஆனந்தி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனா, சுபாஷினி, செல்வசிவம், ஜெயலஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்ஷிகா குசன், விவேக், பைரவி செந்தூரன், பிரணவன், தாயினி, திரவீன், தாட்சாயினி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமலா அவர்களின் அன்புப் பூட்டனாரும்,
காலஞ்சென்ற சரவணமுத்து ஸ்வாமிகள்(திருக்கேதீஸ்வர திருவாசகமட ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மருமகனும்,
அன்னப்பிள்ளை, சிவக்கொழுந்து, ராசம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சொர்ணலிங்கம், மீனலோஷினி மற்றும் உமையாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, நாகேஸ்வரி, நேமிநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சற்குணநாதன் மற்றும் தவமணி, ஜெயமணி, பதுமநிதி, பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகநாயகி, காலஞ்சென்ற விமலநாயகி,செல்வநாயகி, இந்திராதேவி, அருட்கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

