நினைவஞ்சலி

In loving memory of
Nagamuththu Somalingam
Age 74April 28, 1942 – April 25, 2017
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து சோமலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
தங்களை இழந்து ஒரு மாதம்
தாண்டியதெப்படிப் புரியவில்லை
இங்கது நீங்கள் இன்று இல்லை என்று
எண்ணிட எம்மால் முடியவில்லை!
யாருக்கும் தீங்கு எண்ணாது
எல்லோரையும் மதித்து நடப்பீர்கள்
ஊருக்கும் உள்ளத்து உறவுகட்க்கும்
உண்மையோடு வாழ்ந்து இருந்தீர்கள்!
பேருக்காய் புகழுக்காய் வாழாது
பெரு மனம் கொண்டு வாழ்ந்தீர்கள்
நேருக்கு நின்று (இன்று) காண்பதற்கு - இல்லை
நீங்கள் என்று எண்ண முடியவில்லை!
எளிமைக் குணமும், இரங்கிடும் மனமும், உதவிடும்
எண்ணமும், உண்மைச் சிரிப்பும்
எம்மிடம் இல்லை என்று
எண்ணும் போது - முடியவில்லை!
உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்
எமது தந்தையின் இழப்பின் போது இரங்கல்களை தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச்செய்தி அனுப்பியவர்களுக்கும், இன்னும் பல்வேறு வழிகளில் எமக்கு உதவி புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

