Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagamuthu Yoganathan

In loving memory of

Nagamuthu Yoganathan

Age 72August 24, 1944 – August 22, 2017

Born in
Alaveddi
Lived in
India, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து யோகநாதன் அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகமுத்து, கனகம்மா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், திருநாவுக்கரசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்(கனடா), சுகுணா(கனடா) , ரமேஸ், காலஞ்சென்றவர்களான சதீஸ், கேதீஸ், மற்றும் ரமணா(கனடா), சபேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பத்மநாதன், யோகமலர்(பிரித்தானியா), சாந்திநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன், சந்திரமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பிகா(கனடா), செல்வேந்திரன்(கனடா), சந்திரகலா, ஹரிகரன்(கனடா) , லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னபூரணம்(கனடா), சந்திரகுமாரன்(பிரித்தானியா), வனிதாமணி(கனடா), உமாராணி(கனடா), நளினி(கனடா), சுகுமாரி(நோர்வே), மகேந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற வரதராஜா, சரோஜினிதேவி, சரஸ்வதிதேவி, காலஞ்சென்ற தேவராஜா, மகாதேவி, காலஞ்சென்ற சிவராஜா, தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷ்ணு, மீனாட்சி, துவாரகன், லக்‌ஷன், கீர்த்திகன், கபிலன், நளிநயா, நிவேத், மைத்திரி, ரோகித் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-08-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை யாழ்ப்பாணம் ஓட்டுமடம் இன்பம் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணியளவில் அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில்(தவளக்கிரி அம்பாள் கோவில் அருகாமையில்) நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.