Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Nagar Tharmalingam

In loving memory of

Nagar Tharmalingam

Age 77August 26, 1938 – November 9, 2015

Born in
Thellipalai
Lived in
Vavu Thonikkal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகர் தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!

அன்புக்கு இலக்கணமாயும் பாசத்தின் உறைவிடமாயும்
பாரினில் எங்களை எல்லாம் பாசத்துடன் அரவணைத்து
வழிநடத்தினீர்கள் அப்பா நீங்கள் எங்களுடன்
வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் உங்கள் நினைவுகள்
நிழலாய் தொடருது அப்பா!

ஆண்டுகள் ஆயிரம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது அப்பா
மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் எங்களுடன்
வந்து விடுங்கள் அப்பா!

எங்களை எல்லாம் விட்டு எங்கு சென்றீர்கள் அப்பா
ஆண்டுகள் பல சென்றாலும் எங்கள் நெஞ்சினில்
என்றும் வாழ்வீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

வீட்டு முகவரி:
67, புதுக்கிணறு வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

— குடும்பத்தினர்

Other notices

  1. 31st day · December 8, 201531ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.