1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagarasa Nageswary
Age 79July 28, 1936 – May 6, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Norway, Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா நாகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கோர் இலக்கியமாய்
அவனியிலே உலா வந்தவளே!
அபயம் என வந்தோர்க்கு
அடைக்கலம் அளித்தவளே!
எம்முடனே நீ இருந்தால்
எவருமில்லை எமக்கு நிகர்!
இப்போ நீயின்றி போனதால்
நிலை குலைந்து போனோமே!
ஏன் இந்த நிலை எமக்கு
எங்கு போனாய் எம் அம்மாவே!
வையத்துள் வாழும் எமை மறந்து
வானுலகம் போனாயோ?
வாடும் எம் உளம் எங்கு காணும்
உன் உருவம்!
நீயின்றி போனதால்
நினைவழிந்து போனதே!
எம் நெஞ்சம் இங்கு வேகுதே
ஆறுதல் வார்த்தைகளை
ஆர் தருவார் இனி நமக்கு!
ஆருயிர் உறவே வேறுயிர்
உனக்கு வருமா!
பூமுகம் பார்ப்போமா
அதில் புன்னகை காண்போமா?
நீ முந்தி போனதால் நிர்க்கதியாய் நிற்கின்றோம்.
நினைவிழந்து போய்விட்டோம்!
ஆறுதல் தர வருவாயோ மாட்டாயோ?
உங்கள் பிரிவால் துயரறும் பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

