31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nalliah Annalakshumy
Age 79September 20, 1937 – November 15, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா அன்னலெட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எமது அன்புத் தெய்வத்தின் திருப்பாதக் கமலத்தில்
இம்மலர் சமர்ப்பணம்
வளமான வாழ்வு தந்து
வாழ்விற்கு ஒளி தந்து
தேசம் புகழும் நிலை பெற்று
பாசத்துடன் எமை வளர்த்து
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆன்மா தாங்கிய சரீரம் நீங்கி
ஆண்டவன் அடியில் அமரத்துவம் கொண்ட
எங்கள் அன்புத்தாயின் பாதம் பற்றி
உணர்வினால் பூஜித்து
உயிரினால் அலங்கரித்து
உதிரத்தால் தீபம் ஏற்றி
எம் கண்ணீரால் அர்ச்சனை செய்து
அம்மாவின் நினைவுகளைச் சுமந்துவரும்
தீபமலரை அன்னையின் பாதக்கமலங்களுக்கு
சமர்ப்பணம் செய்கின்றோம்
ஏற்றருள்வீர் எம்மினிய தாயே!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
பிரிவால் வாடும்
பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும்
எங்கள் குடும்பத் தலைவி தங்கமான அம்மா நல்லையா அன்னலட்சுமி அவர்களின் மரணச்செய்தி கேட்டு நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபச் செய்திகளை தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும், மலர் வளையங்கள் சாத்தியோருக்கும், இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியோருக்கும், ஆத்மாசாந்தி கிரிகைளிலும் பங்குபற்றியவர்களுக்கும் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துகொண்டவர்களுக்கும், எங்களுக்கு பல வழிகளில் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

