31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nalliah Paramsothy
Age 71April 7, 1945 – January 6, 2017
- Born in
- Puliyangkoodal
- Lived in
- Puliyangkoodal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பரம்சோதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஊரோடு வாழ்ந்து உறவுகள் பேணி
உவகை உற்றவன் நீ- எம் ஆத்தாள்
தேரடி போற்றித் திருவடி வாழ்த்தி
அன்னையின் திருவருள் பெற்றவன் நீ...
யாரெவர் மனமும் நோவுறா வண்ணம்
வாழ்வினை அமைத்தவன் நீ- இன்று
நீரோடு விழிகளில் துயரலை வடிய
நின்னுயிர் பிரிந்ததுமேன்...
வலி சுமந்து விழி கரைந்து
அகமுருகிப் பிரார்த்திக்கின்றோம்!
எம் குலமகள் செருத்தனைப்பதி
ஸ்ரீ இராஜ மகமாரி அன்னையின்
திருவடியில் உங்கள் ஆத்மா சாந்தியடைக...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
எமது குடும்பத்தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர், நோயுற்றிருந்த காலத்தில் பராமரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியோர், ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வேலணை சாட்டி புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். மேலும் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய ஆத்மசாந்தி நிகழ்விலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

