Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paramalingam Sanmugarajah

In loving memory of

Paramalingam Sanmugarajah

Age 84June 19, 1933 – March 20, 2018

Born in
Tholpuram
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சண்முகராஜா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அண்ணாமலை, அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாலராணி(ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- கோப்பாய்) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, ரட்ணராஜா, சரசானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுந்தர் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பாலமனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஷ்டிகா, ஷாரிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.