மரண அறிவித்தல்

In loving memory of
Paramanathar Perampalam
Age 80June 2, 1937 – October 4, 2017
- Born in
- Meesalai East
- Lived in
- Meesalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை கிழக்கு அல்லாரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் பேரம்பலம் அவர்கள் 04.10.2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமநாதர், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலநாதன், திலகவதி, பரமநாதன்(கனடா), கேதீஸ்வரி(நோர்வே), நடேசநாதன்(கனடா), லோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமி, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், தங்கம்மா, மற்றும் அருணாசலம்(கிராம்புவில்) உமையம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி, கயிலாயபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர் - யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), இலங்கேஸ்வரி(கனடா), சந்திரகுமார்(நோர்வே), ஜெகதீஸ்வரி(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மதுசன், மதுசனா(கலைப்பீடம்- யாழ். பல்கலைக்கழகம்), மதுவாசனா, மதுமினி பிரகாஸ்(பொறியியலாளர் - நீர்ப்பாசனத் திணைக்களம், வடமாகாணம்), பிரசன்னா(சனசமூக உத்தியோகஸ்தர் பாண்டியன்குளம்), பிரதாப்(CESL- இரணைமடு), இளநிலா, சாளினி, தர்மிரா, அபிரா, பிரவீன், மஞ்சரி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

