மரண அறிவித்தல்

In loving memory of
Paramasivam Velauthapillai
Age 59February 2, 1957 – September 13, 2016
- Born in
- Thellipalai
- Lived in
- Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் வேலாயுதபிள்ளை அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி, கந்தசாமி(ஓய்வுபெற்ற S.S.P- கொழும்பு), கமலாதேவி(கனடா), காலஞ்சென்ற அருணகிரி(Chief Burner K.K.S Cement Factory), மணிவாசகர்(Professor- Jaffna University), காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(Fitter- Gum Mechanic Cement Factory), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஹேமமாலினி, அருமைத்துரை(ஓய்வுபெற்ற தபால் அதிபர், கனடா), புஸ்பவல்லி(கொழும்பு), சுசிலா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மானிப்பாய் வீதியில் உள்ள இன்பம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

