5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pathmanathan Gowryambaal
Age 66March 10, 1949 – July 7, 2015
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கௌரிஅம்பாள் பத்மநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் அணையாத சுடராய்
என்றும் இருப்பீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

