Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Pathmanithi Premachandran

In loving memory of

Pathmanithi Premachandran

Age 50March 12, 1959 – May 8, 2009

Born in
Valvettithurai
Lived in
Valvettithurai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வல்வெட்டித்துறை காட்டுவளவைச் சேர்ந்த பத்மநிதி பிரேமசந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

இவர், காலஞ்சென்ற தணிகாசலம் மெஞ்ஞானமாலை(கலாநிதி ஸ்ரோர்) அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவலிங்கம் ஜெயலக்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும்,

பிரேமசந்திரன்(ராஜ் அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

பௌர்ணமி கூட ஓர் நாள்
பால் ஓளி தர மறந்தது,
பத்மநிதி அன்று சிவன்
பாதம் அடைந்தபோது

தினந்தோறும் அழுதோம்
தேற்றுவாரின்றி - தெய்வம்
உனையெமக்குத் திரும்பவும்
தந்திடாதா என்றெண்ணி
எல்லாமுமாய் இருந்த உனை
இழக்க மனம் எண்ணிடுமோ?

எல்லாமே கனவென்று
எண்ணத்தான் தோன்றிடாதா?
முழு நிலவே உன்
முகந்தான் எங்கள் ராசி – எங்கள்
மனங்களிலே நீதான் - என்றும் மகராணி!

பணிய வைத்தாய் - உன்
பாசத்தைக் காட்டி - இன்று
தவிக்க வைத்தாய் - உன்
பிரிவைக் காட்டி
அன்பு என்னும் நல்ல
தேன் கலந்து – நீ
ஆக்கித் தந்த நல்விருந்தில் - அன்று
அமிர்தம் கண்டோம்.

பேசக் கூடாதா – என்
எண்ணும் அளவுக்கு – உன்
பேச்சில் சுகமும் கண்டோம்.

சொந்தங்கள் மட்டுமல்ல
சுற்ற சூழமும்
சொல்கிறது – உனக்காய்
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

விழிநீரை மழையாக்கி
வேதனையில் ஆழ்த்திவிட்டாய் - எம்
விழிநீர் துடைத்திட – நீ
விண்ணைத் தாண்டி வருவாயா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
வல்வைமுத்துமாரி அம்மனை
பிரார்த்திக்கின்றோம்.

— உங்கள் பிரிவை தாங்கமுடியாமல் தவிக்கும் கணவர், அம்மா, மாமா, மாமி, சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், மருமக்கள், பெறமக்கள், ஆஷா, சிந்து, டுலக்சி, உற்றார், உறவினர், நண்பர்கள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.