மரண அறிவித்தல்

In loving memory of
Pilippu Moses Nesaratnam
Age 76January 4, 1941 – May 28, 2017
- Born in
- Kili Kunchukulam
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் பெரிய குஞ்சுகுளத்தைப் பிறப்பிடமாகவும், ஜீவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு மோசஸ் அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியோகு மொத்தம் சுவாந்து(உடையார்) அந்தோனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சகுந்தலா, றோசலின்(பிரான்ஸ்), போஸ்றா, ஜோய், பாஸ்கரன், சுரேஸ்(பிரான்ஸ்), லீயோ(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிஷாந்தன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பீற்றர், ஜெயம்(பிரான்ஸ்), தேவராஜா, வினி, மனோ, சகிலா(பிரான்ஸ்), அபர்னா, றெஜினோட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மரியாச்சி, காலஞ்சென்ற அழகம்மா, செல்வகுமாரத்தி, மலர், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்வாசகம், ஜோன் தேவராஜா(பிரான்ஸ்), முத்துராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற அருளம்மா, லுமினா(பிரான்ஸ்), கிறிஸ்தி(கனடா), மேரியசிந்தா, லூர்துநாயகம், காலஞ்சென்ற பர்நாந்து, செல்வம், நேசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மன்னார் ஜீவநகர் புனித லூர்து மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சிறுக்கண்டல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

