31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ponnar Sinniah
Age 72December 15, 1944 – November 19, 2017
- Born in
- Point Pedro Viyaparimoolai
- Lived in
- Point Pedro Viyaparimoolai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை பழவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னர் சின்னையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை...!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
முப்பத்தொரு நாட்கள் போனால் என்ன
முப்பதாண்டுகள் கடந்தாலும்- உங்கள்
வாழ்வும் வாக்கும் பயின்றே வாழ்வோம்!
உயிராய், தெய்வமாய், ஒளியாய், தந்தையாய், ஆணிவேராய், அன்பின் உருவமாய் விளங்கிய மதிப்புக்குரிய பொன் சின்னையா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும், துயரத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளை காகிதத்திலும், பதாகைகளிலும் அருளிய பெருந்தகைகளுக்கும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரை வழங்கியவர்களுக்கும், வழக்கறிஞ்ஞர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபன(யாழ்மாவட்ட) அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும், அபர கிரியைகளைச் சிறப்புற செய்த அந்தண பெருந்தகைகளுக்கும், இம்மலருக்கு நினைவலைகளை அனுப்பியவர்களுக்கும், இன்றைய ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் நாம் குறிப்பிட மறந்து பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

