1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ponnuththirai Amaravathi
Age 85March 15, 1930 – February 10, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Chundikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை அமராவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
பட்டினத்தார் பாடலும்
நல்லதங்காள் கதையும் உங்களோடு
மறைந்தே போய் விட்டது
மாற்றுக் குறையாத தங்கமே
மரணம் உங்களை எங்களிடம் இருந்து
பிரித்து விட்டாலும் எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
தாயாய் எனைத் தாங்கியவளே
தமையனாய் எனைப் பார்த்தவளே
வீட்டு வாசலில் நின்று எனை வரவேற்று என்
வயிறாற உணவுதனை ஊட்டியவளே
நொந்து ஒரு சொல் சொல்லாத மாமியே
நொடிப் பொழுதும் உன்னை மறவேன் மாமியே!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன் மாமியே
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தேனோ மாமியே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணகி அம்மனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்
சகோதரி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— சந்திரசேகரம்(சந்திரன்- மருமகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

