மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Kathirkamanathan
Age 63July 8, 1953 – October 23, 2016
- Born in
- Urelu
- Lived in
- Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கைதடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கதிர்காமநாதன் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மதீபன்(பெரியகண்ணா), மறூபன்(சின்னக்கண்ணா), மகிந்தா(கண்ணம்மா) ஆகியோரின் தந்தையும்,
சிவசோதி, ஜெகசோதி, தவசோதி, வரதநாதன் ஆகியோரின் சகோதரரும்,
ராசம்மா, அன்னம்மா, வல்லிபுரம், முத்தம்மா, செல்வி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஊரெழு பொக்கனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

