1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ponnuthurai Thuraiselvam
Age 67July 16, 1948 – March 15, 2016
- Born in
- Chulipuram
- Lived in
- Norway, Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், நோர்வே Vardø, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை துரைச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு
எங்களைப் பாதுகாப்பாகப் பார்த்து
நல்லவற்றைக் கற்றுத் தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா
என்று உம்மை இனிக் காண்போமோ அப்பா
மாதங்கள் பன்னிரண்டு ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே அப்பா
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
அப்பா அப்பா என்று நாங்கள்
கதறும் குரல் கேட்கவில்லையா!
அப்பா உங்கள் பேரப்பிள்ளைகள் கேட்கிறார்கள்
எங்கள் தாத்தா வரமாட்டாரா என்று
நாங்கள் என்ன பதில் சொல்ல
ஓராண்டென்ன! எத்தனையாண்டுகளானாலும்
உன்னடி தொழுது வணங்குவோம்!
நிலையான நித்ய ஆத்மசாந்தி வேண்டி
இறைவனிடம் வேண்டுகின்றோம்.
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

