நினைவஞ்சலி

In loving memory of
Poopalasingam Packiyam
Age 75June 4, 1935 – August 16, 2010
- Born in
- Mathagal
- Lived in
- Mathagal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் பாக்கியம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூர்பக்க அட்டமி 15-08-2021
அம்மா நீ சென்ற கணமும்அம்மா நீ சொன்ன வார்த்தைகளும்அம்மா நீ செய்த உன்னதங்களும்அம்மா நீ தந்த நெறிகளும்எம் நெஞ்சினில் என்றும் அழியாதம்மாஎழுகின்ற கேள்விகளுக்கெல்லாம்
நாளும் விடை தேடுகின்றோம் அம்மா!எங்கள் வலிகளைத் தாங்கயாருமே இல்லையம்மாஅப்பா அம்மா இல்லாதஅநாதைகளானோம் அம்மாஅந்த இறைவனே கண்ணீரைப் பரிசாகத் தந்துமௌனம் காணுகின்றார் அம்மாஅன்பு அம்மாவே!கொடிய நோய் வடிவில் காலன்கொன்றுவிட்டானே உங்களைஅன்று மாலைவரை நீங்கள் புரிந்த அன்பு மழைஇன்னும் எம் கண்முன்னே வந்து செல்லுதம்மா.....
நாடு கடந்து வந்து நாம் உங்களைக் கண்டுநாளும் பொழுதும் மகிழ்ந்து இருந்த கணங்களும்மருமகளையும், பேரப்பிள்ளைகளையும்நீ கொஞ்சிக் குலாவிய தருணங்களும்என்றும் உங்களை நினைவூட்டுகின்றது அம்மா.....
நீங்கள் எனக்காக கட்டிய வீடுஇன்று பாலைவனமாய் கிடக்கின்றதுநீங்கள் இன்று இருந்திருந்தால்நீங்களாவது அந்த வீட்டில் இருந்திருப்பீர்களே அம்மா...உயிரைத் தந்து உடலில் சுமந்துஉலகில் வாழ உருவம் தந்ததெய்வம் நீயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

