Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pushpalilli Mariyanayagam

In loving memory of

Pushpalilli Mariyanayagam

Age 66December 17, 1949 – April 21, 2016

Born in
Colombo
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பலில்லி மரியநாயகம் அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி பெர்னாண்டோ, ரீற்றம்மா தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வியும், சவிரிமுத்து வியாகுலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷாமேன்(ஜெர்மனி), ஷர்மிலா(சுவிஸ்), ஷாலினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வட்சன், யசிந்தா, யூலியஸ், மற்றும் இமெல்டா, லீனஸ், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தராசா, அன்ரன், அனிதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரியநாயகம் அவர்களின் சகோதரர்களின் அன்பு அண்ணியும்,

மரியநாயகம் அவர்களின் சகோதரர்களின் அன்பு மைத்துனியும்,

சேர்மானப்பர், ஜேசுதாஸ், சேஷாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷகிலா, அனிஸ்டன், அலெக்சன், ஷயானா, டிலைட்டி, டிவைனா, செக்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் தேவ ஆராதனை 25-04-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் அவரது இல்லத்தில் Jesus Saves Church பாஸ்டர் வோல்டர் ராஜமணி அவர்களின் தலைமையில் நடைபெற்று பின்னர் கொழும்பு மாதம்பிட்டி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 68/15,
ஐம்பட்டா வீதி,
கொழும்பு-13.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.