மரண அறிவித்தல்

In loving memory of
Pushpavathi Kandasamy
Age 86April 10, 1931 – February 28, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Avarangal, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி கந்தசாமி அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தினி, மாலினி, நந்தகுமார், சுகந்தினி, சிவகுமார், வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேசன், மோகனகுமார், பிரேமச்சந்திரன், தயாநிதி, றேமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடேசப்பெருமாள், பரமேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இலகுப்பிள்ளை, வரதலக்ஸ்மி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ஞானசெளந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிஷாந், சிவானி, இஷானா, ஆதித்தியா, ஆதவன், தானியா, விகாஷ், ஹர்சனா, அபினா, பிரவீன், ஆரனி, சாலினி, அஸ்வினி, அஸ்வின், எலிஷா, யொனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

