5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Puvaneshwari Anatharajah
Age 59July 22, 1956 – July 9, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Thirunelveli, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி ஆனந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உனைப் பிரிந்து இன்றோடு
ஆண்டுகள் ஐந்துஆகிவிட்டது-ஆனாலும்
உன் முகம் மறக்க ஒருபோதும்
எம்மால் முடியவில்லை
தேவதை அம்மாவை
தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட
கை விட்டதோ!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம்
ஒரு இடமும் காணவில்லையே ....
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும்
எம்முடன் நிரந்தரம் தான்
நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
கணவர், பிள்ளைகள்
— கணவர், பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

