மரண அறிவித்தல்

In loving memory of
Rajarajeswary Visvanatha Muthaliyar
Age 95July 29, 1922 – October 15, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Colombo, Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜராஜேஸ்வரி விஸ்வநாத முதலியார் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன்(ஆதிமயிலிட்டி), பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வநாத முதலியார் அவர்களின் அருமை மனைவியும்,
பாஸ்கரி, பகீரதி(வைத்திய கலாநிதி), பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி சிவராஜா, காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி மற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி சச்சிதானந்தன், காலஞ்சென்ற சிறீபாஸ்கரன், சுசீந்திரராஜா(பேராசிரியர்), காலஞ்சென்ற மகேந்திரன்(வைத்திய கலாநிதி), பாலேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சிவஞானசுந்தரம், தங்கவேல் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
மயூரன், மதீபன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று Liberty Funerals ,101 South St, Granville NSW 2142, Australia என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-10-2017 புதன்கிழமை அன்று இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் Rookwood Crematorium, South Chepel என்னும் முகவரியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4/191, Liverpool Road,
Burwood NSW 2134,
Australia.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

